×
Saravana Stores

கவர்னரின் முடிவுக்கு இன்று உரிய பதில்: அமைச்சர் ரகுபதி பேட்டி

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை மார்த்தாண்டபுரத்தில் நேற்றிரவு அளித்த பேட்டி: ஆளுநர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியது செல்லுமா? செல்லாதா? என்று எங்களது வழக்கறிஞர்கள் சொல்வார்கள். நிச்சயமாக ஒருவரை அமைச்சரவையில் வைத்துக் கொள்வதும் அவரை நீக்குவதும் தமிழ்நாடு முதலமைச்சர் விருப்பம் தான். ஆளுநரை பற்றி பேசி பிரயோஜனம் இல்லை. அவர் தனக்கு என்ன அதிகாரம் இருக்கு இல்லை என்று தெரிந்து கொண்டு செய்கிறாரா? இல்லையா? யாருடைய ரப்பர் ஸ்டாம்பாக இருக்கிறார் என்பது தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரை நேற்று அவர் எடுத்து இருக்கும் நடவடிக்கைக்கு இன்று நிச்சயமாக சரியான பதிலை தமிழ்நாடு முதலமைச்சர் தருவார். இது ஜனநாயக நாடா இல்லை ஆளுநரின் சர்வாதிகார நாடா?. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறும் பொழுது ஆவணத்தை தூக்கி வெளியே எறிந்தார்கள். என்ன ஆவணம் என்று தெரியாமல் இருந்தது. அன்றைக்கு அவரை கைது செய்திருக்க வேண்டும் அன்றைக்கு ஆளுநர் என்ன செய்து கொண்டு இருந்தார். அப்போது அமலாக்க துறையோ அல்லது சோதனைக்கு வந்த அமைப்போ நடவடிக்கை எடுக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

The post கவர்னரின் முடிவுக்கு இன்று உரிய பதில்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,Minister ,Raghupathi ,Tamil Nadu ,Law ,Raghupathi Pudukottai ,Marthandapuram ,Senthil Balaji ,
× RELATED திராவிடம் இல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது: அமைச்சர் ரகுபதி