×

கீழக்கரை பேருந்து நிலையத்திற்கு பஸ்கள் வந்து செல்ல வலியுறுத்தல்

கீழக்கரை: கீழக்கரையில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கீழக்கரையை தாலுகாவாக தரம் உயர்த்திய பிறகு மாயாகுளம், ஏர்வாடி, புல்லந்தை, பெரியபட்டிணம், வண்ணாங்குண்டு, தினைகுளம், போன்ற 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். கீழக்கரையில் மகளிர் கல்லூரி உட்பட 4, கல்லூரி, 15க்கும் மேற்பட்ட பள்ளிகள், 5க்கும் மேற்பட்ட வங்கிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் அரசு மருத்துவமனை தாலுகா அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகத்திற்கும், வங்கிகளுக்கும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி போன்ற ஊர்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் வந்து செல்கின்றன. இந்நிலையில் அரசு பேருந்துகள் பல கீழக்கரை பேருந்து நிலையத்திற்கு வராமல் சில நடத்துனர்கள் கீழக்கரை முக்கு ரோட்டில் இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் கிராமங்களில் இருந்து வரும் மக்கள் கைக்குழந்தையுடன் கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஊருக்குள் நடந்து வரும் நிலை ஏற்படுகின்றது என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவின் அடிப்படையில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு போக்குவரத்து பணிமனை அலுவலகத்திற்கு நேரில் சென்று நகர்பேருந்து மேலாளர் சந்தித்து கடிதம் மூலமாக அனைத்து பேருந்துகளும் கீழக்கரை புதிய பேருந்து நிலையத்திற்குள் வர வழிவகை செய்யுமாறு கோரிக்கை வைத்தார்கள். கோரிக்கை ஏற்ற தமிழ்நாடு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர்கள் இனி அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திக்குள் சென்று வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். புதிய பேருந்து நிலையத்திக்குள் சென்று வராத பேருந்துகளையும் மற்றும் பேருந்து ஓட்டுநர்களை புகைப்படத்துடன் என்னுடைய தொலைப்பேசிக்கு புகார் அளிக்கவும் என்றும் கூறினார்கள்.

The post கீழக்கரை பேருந்து நிலையத்திற்கு பஸ்கள் வந்து செல்ல வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : taluga ,Mayakulam ,Airwadi ,Dinakaran ,
× RELATED ஊராட்சி செயலாளர், மனைவி மீது ரூ.20.43 லட்சம் சொத்து குவிப்பு வழக்கு