×

நிதி நிறுவன மோசடி ரூ.4 கோடி சொத்து கையகப்படுத்த திட்டம்

கோவை: கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் கோவை பீளமேட்டில் நிதி நிறுவனத்தை கடந்த 2012ம் ஆண்டு தொடங்கினார். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி உள்பட பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை நம்பிய ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்தனர். பொதுமக்கள் முதலீடு செய்த பணம் 1,300 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை தேடி வந்தனர். இதனிடையே அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த நிலையில் அவரின் நிதி நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கினர். இது குறித்து போலீசார் கூறியதாவது: ரமேஷ் நடத்திய நிறுவனத்தில் மோசடி நடந்தது தொடர்பாக இதுவரை 90 பேர் வரை மட்டுமே புகார் அளித்து உள்ளனர். கோர்ட்டில் சரண் அடைந்து உள்ள ரமேசை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளோம்.

அந்த நிதி நிறுவனத்தின் 36 வங்கிக்கணக்குகளை இதுவரை முடக்கி உள்ளோம். இதில் 2 வங்கிக்கணக்கில் இருந்த ரூ.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரமேஷூக்கு உதவியாக இருந்த 7 பேரை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களை கைது செய்ய திட்டமிட்டிருக்கிறோம். அந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமாக 10 இடங்களில் வீடு, நிலம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவற்றின் அரசு வழிகாட்டு மதிப்பு ரூ.4 கோடி ஆகும். இதனை கையகப்படுத்தக்கோரி அரசிற்கு பரிந்துரை செய்து உள்ளோம். இதையடுத்து அரசு ஆணை பிறப்பித்ததும் இந்த சொத்துக்களை மாவட்ட வருவாய் அதிகாரி கையகப்படுத்தி கோர்ட்டில் அனுமதி பெற்று ஏலத்தில் விட நடவடிக்கை எடுப்பார்’’ என்றனர்.

The post நிதி நிறுவன மோசடி ரூ.4 கோடி சொத்து கையகப்படுத்த திட்டம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ramesh ,Sulur ,Beelamet, Coimbatore ,
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது