×

கரையில் அமர்ந்து மது அருந்திய ஓட்டுனர் வாய்க்காலில் விழுந்து பரிதாப சாவு

கோபி: கோபி அருகே மூலவாய்க்கால் பகுதியில் தடப்பள்ளி வாய்க்கால் கரையில் அமர்ந்து மது அருந்தியபோது வாய்க்காலில் தவறி விழுந்து டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம் சுள்ளிக்கரடு வீதியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் பிரகாஷ் (22). பிரகாஷ் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். பிரகாஷ், அவரது உறவினரான நல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த ஞானக்குமார் மகன் கதிர்வேல் உள்ளிட்ட சிலருடன் மூலவாய்க்கால் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது வாங்கிக் கொண்டு, அருகில் உள்ள தடப்பள்ளி வாய்க்கால் கரையில் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பிரகாஷ் வாய்க்காலில் தவறி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றுள்ளனர். அப்போது ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கவே இதுகுறித்து கோபி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கோபி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் வாய்க்காலில அடித்து செல்லப்பட்ட பிரகாசின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கரையில் அமர்ந்து மது அருந்திய ஓட்டுனர் வாய்க்காலில் விழுந்து பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Gobi ,Thadappalli ,
× RELATED கோபி அருகே கோயில் திருவிழாவில்...