×

அரியலூர் அருகே கோயில் குளத்தில் குளித்த அக்கா, தங்கை சாவு

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஒக்கநத்தம் வடக்கு தெருவைச் சேர்ந்த முருகானந்தம் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள்கள் அட்சயா(17). பிளஸ் டூ முடித்துள்ளார். இவரது தங்கை அபி(15) 10ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் புனேவில் உள்ள ராணுவ பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கோடை விடுமுறைக்கு ஊருக்கு வந்த அட்சயா, அபி பிலிச்சிகுழி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் குளத்தில் நேற்று மாலை குளித்த போது நீரில் மூழ்கி மயக்கம் அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அட்சயா மற்றும் அபியை பரிசோதனை செய்த டாக்டர் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இவர்களது உடல் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து வழக்கு பதிந்த உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அரியலூர் அருகே கோயில் குளத்தில் குளித்த அக்கா, தங்கை சாவு appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Jeyangondam ,Murukanandam ,Okkanantham North Street ,Wodeyarpalayam ,Ariyalur district ,Indian Army ,
× RELATED நரசிங்கபாளையம் கிராமத்தில் இருந்து...