×

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் ஜப்பானை வீழ்த்தியது இந்தியா

பூசன்: ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரின் லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் நேற்று மோதிய இந்தியா அபாரமாக வென்றது. தென் கொரியாவின் பூசன் நகரில் 11வது ஆசிய சாம்பியன்ஷிப்-2023 கபடி போட்டி நடக்கிறது. கொரோனா உள்பட பல்வேறு காரணங்களால் 2017க்கு பிறகு நடைபெறும் இப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஹாங்காங், தென் கொரியா, ஜப்பான், தைவான், ஈரான் அணிகள் பங்கேற்றுள்ளன.
ரவுண்டு ராபின் முறையில் நடைபெறும் தொடரில் நேற்று இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே முழு வேகத்துடன் விளையாடிய இந்தியா முதல் 4 நிமிடங்களிலேயே ஜப்பானை ஆல்அவுட் ஆக்கி புள்ளிகளை குவித்தது. முதல் பாதி முடிவில் 32-6 என வலுவான முன்னிலை பெற்றது. கேப்டன் பவன் ஷராவத் 6 புள்ளிகளை குவித்திருந்தார்.

2வது பாதியில் கடுமையாகப் போராடிய ஜப்பான் கணிசமான புள்ளிகளை குவித்தது. ஆட்ட நேர முடிவில் இந்தியா 62-17 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டங்களில் இன்று ஈரானையும், நாளை மறுநாள் ஹாங்காக் அணியையும் சந்திக்கிறது. முன்னதாக, முதல் ஆட்டத்தில் தென் கொரியாவை 76-13, 2வது ஆட்டத்தில் தைவானை 53-19 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

The post ஆசிய கபடி சாம்பியன்ஷிப் ஜப்பானை வீழ்த்தியது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Japan ,Asian Kabaddi Championship ,South… ,Dinakaran ,
× RELATED ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத்...