×

ஸ்ட்ரீம் சிட்டி எலக்ட்ரிக் ஆட்டோ

எலக்ட்ரிக் வாகனம் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஒமேகா சீக்கி மொபிலிட்டி, ஓ.எஸ்.எம். ஸ்ட்ரீம் சிட்டி என்ற 3 எலக்ட்ரிக் ஆட்டோவை அறிமுகம் செய்துள்ளது. ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப ஏடிஆர் மற்றும் 8.5 என இரண்டு வேரியண்ட்கள் இதில் உள்ளன. ஓ.எஸ்.எம். ஸ்ட்ரீம் சிட்டி ஏ.டி.ஆர். மாற்றத்தக்க பேட்டரியுடன் ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.85 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்ட்ரீம் சிட்டி 8.5 நிலையான பேட்டரி கொண்டது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.3.01 லட்சம். ஸ்ட்ரீம் சிட்டி 8.5-ல் கிலோவாட் அவர் லித்தியம் அயன் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 9.55 கிலோவாட் பவரையும், 430 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 117 கி.மீ தூரம் வரை செல்லலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ட்ரீம் சிட்டி ஏடிஆர்-ல், மாற்றிக் கொள்ளக்கூடிய லித்தியம் 48 வோல்ட் 6.3 கிலோவாட் அவர் லித்தியம் அயன் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 9.55 கிலோவாட் பவரையும் 430 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கி.மீ தூரம் வரை செல்லலாம். பயணிகளுக்கான எலக்ட்ரிக் ஆட்டோ மூலம் வாகன ஓட்டிகளின் வருவாய் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் அதிகரிக்கும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post ஸ்ட்ரீம் சிட்டி எலக்ட்ரிக் ஆட்டோ appeared first on Dinakaran.

Tags : Stream City Electric Auto ,Omega Sikki Mobility ,O. S. MM ,Stream City ,Electric Auto ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…