×

மெட்ரோ திட்ட பணிகளால் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் பாதிக்கப்படாது: சித்திக் பேட்டி

மெட்ரோ திட்ட பணிகளால் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் பாதிக்கப்படாது என மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிமீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய, ஐதராபாத் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 28ம் தேதி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ரூ. 8,500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மெட்ரோ நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அதிகாரிகளுடன் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக்; மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை ஜூலை 15ம் தேதி தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யப்படும். மதுரை மெட்ரோ திட்டப் பணிகள் 30 கி.மீ,. என வரையறுத்த நிலையில் 31 கி.மீ. ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒத்தக்கடை-திருமங்கலம் வரை 30 கி.மீ. என வரையறுத்த நிலையில் 31 கி.மீ. ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒத்தக்கடை-திருமங்கலம் இடையே 18 ரயில் நிலையங்கள் என்பது 27 ரயில் நிலையங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பணிகளால் சித்திரை திருவிழா தேரோட்டம் பாதிக்காது. மதுரை மெட்ரோ ரயில் பாதைகளுக்கும், உயர்மட்ட மேம்பால பாதைக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை. மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியதில் இருந்து 4 ஆண்டுகளில் நிறைவுபெற்று பயன்பாட்டுக்கு வரும் இவ்வாறு கூறினார்.

The post மெட்ரோ திட்ட பணிகளால் மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் பாதிக்கப்படாது: சித்திக் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Meenatchi ,Amman Temple Trouble ,Siddhik ,Metro Railway ,Managing Director ,Sidthik ,Meenatchi Amman Temple ,
× RELATED மகளிர் உரிமை திட்டம் வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு பாராட்டு