×

சுனாமி வேகத்தில் அரசுப்பணிகள்!: கோட்டையில் தீட்டி வரும் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர நடவடிக்கை..முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!!

சென்னை: கோட்டையில் தீட்டி வரும் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் எனும் தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி, கீதாஜீவன், சக்கரபாணி, சாமிநாதன், பெரிய கருப்பன், காந்தி, டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு, உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

ஒவ்வொரு திட்டத்திலும் அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம்:

திட்டங்களை அறிவிப்பதோடு நின்றுவிடாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு திட்டத்திலும் அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம். திட்டங்களை தொடர்ந்து கண்காணித்தால்தான் அதனை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும். தமிழக திட்டங்கள் நாட்டின் என்ஜினாக உள்ளதாக பிரதமர் மோடியே பாராட்டியுள்ளார். தமிழகத்தின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

கோட்டையில் தீட்டி வரும் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர நடவடிக்கை:

கோட்டையில் தீட்டி வரும் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்துத்துறை வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு சமமான நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மையான, வளமான மாநிலமாக உருவாக்கிட வேண்டும். நிலம் கையகப்படுத்துதலில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைமைச் செயலகம் முதன்மை செயலகமாக இயங்கி வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம் விரைவில் திறக்கப்படும்:

மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் விரைவில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு என்னென்ன தேவையோ அது நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

சென்னை மாநகரம் பெருமழை வந்தாலும் பாதிக்கப்படாது:

மழை வெள்ளத்தால் தத்தளித்த சென்னை மாநகரம் தற்போது பெருமழை வந்தாலும் பாதிக்கப்படாது. சென்னையில் பெருமழை வந்தாலும் மக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பெரிய மழை வந்தாலும் அரசின் நடவடிக்கையால் பெரியளவில் நீர் தேங்குவதில்லை. திட்டப்பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சுனாமி வேகத்தில் அரசுப்பணிகள்:

அரசு பணிகள் ஆமை வேகத்தில் அல்ல; சுனாமி வேகத்தில் கூட நடைபெறும் என நாம் சில திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

The post சுனாமி வேகத்தில் அரசுப்பணிகள்!: கோட்டையில் தீட்டி வரும் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர நடவடிக்கை..முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!! appeared first on Dinakaran.

Tags : Speed ,CM ,G.K. Stalin ,Chennai ,Chief Minister ,Theti ,Shadichodi ,Tsunami Speed ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...