×

மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரிக்க ஐகோர்ட்கிளை மறுப்பு..!!

மதுரை: மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரல் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் பக்ரீத் பண்டிகையை ஒட்டி நாளை வெளியாகிறது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் ஆடியோ வெளியிட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது. அதன்பிறகு மாரி செல்வராஜ்க்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் மாரி செல்வராஜ் பேசியதற்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இது ஒருபுறம் எனில் அவரது மாமன்னன் திரைப்படத்திற்கும் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதனிடையே மாமன்னன் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனையை காட்டும் விதமாக அமைந்துள்ளதாக குற்றம்சாட்டி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கும் தொடரப்பட்டது.இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

திரைப்பட தணிக்கைத்துறை அனுமதி வழங்கியதில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையினர் பார்த்து கொள்வார்கள் என்றும் திரைப்படம் மக்கள் பார்க்கவே, 2 நாட்களில் அதனை மறந்துவிடுவர் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அனைவருக்கும் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

The post மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரிக்க ஐகோர்ட்கிளை மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai ,Madurai High Court ,Mari Selvaraj ,I-Court ,Dinakaran ,
× RELATED உத்தங்குடியில் உள்ள ஊரணியை சீரமைக்க...