×

மீன்வளத் துறை சார்ந்த படிப்புகள் ரேசன் அரிசி கடத்தியவர் கைது

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சாந்தி, எஸ்.ஐ. கார்த்தி உள்ளிட்ட போலீசார் நத்தக்கடையூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த ஆம்னி கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேசன் அரிசி 700 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் இருந்தவர்கள் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் முத்தூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (43) என்பதும், அவர் காங்கயம், முத்தூர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசிகளை பெற்று வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய எடுத்து சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 700 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

The post மீன்வளத் துறை சார்ந்த படிப்புகள் ரேசன் அரிசி கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Civil Supplies Crime Investigation Department ,Kangayam ,
× RELATED ரேசன் அரிசி பதுக்கியவர் கைது