×

உறுப்பினர் கல்வித்திட்ட முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வளமாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் மீனாட்சி சுந்தரேஸ்வரன் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்/கள அலுவலர் ஆனந்த் சங்கத்தின் பணிகள் பற்றி சிறப்புரையாற்றினார்கள். அதனையடுத்து புதிய உறுப்பினர்கலை சேர்த்தல் தொடர்பான படிவங்களையும் வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் சங்கத்தில் வழங்கப்படும் கடன்கள் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு பயன்பெறும் வகையில் தொடக்க வேளாண்மை சங்கத்தின் பணிகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவி நதியா, சங்க செயலாளர் செல்லத்துரை, கூட்டுறவு ஒன்றியம் மேலாளர் ராஜேஸ்வரி மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram District Cooperative Union ,Valamavur Primary Agriculture Cooperative Credit Union ,Program ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை