×

பக்ரீத் பண்டிகையையொட்டி பாவூர்சத்திரத்தில் இன்று ஆட்டுச்சந்தை

பாவூர்சத்திரம், ஜூன் 28: பக்ரீத் பண்டிகையையொட்டி பாவூர்சத்திரத்தில் இன்று (புதன்கிழமை) ஆட்டுச்சந்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாவூர்சத்திரம் பழைய காய்கனி சந்தை வளாகத்தில் வியாழக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறும். இந்நிலையில் பக்ரீத் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதால், இவ்வாரம் மட்டும் இப்பண்டிகையையொட்டி இன்று ஆட்டுச்சந்தை நடைபெறும் எனவும், வியாபாரிகள், பொதுமக்கள் வருகை தந்து பயன்பெறும் படி சந்தை குத்தகைதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பக்ரீத் பண்டிகையையொட்டி பாவூர்சத்திரத்தில் இன்று ஆட்டுச்சந்தை appeared first on Dinakaran.

Tags : Bakrit festival ,Bhavoorchatra ,Bhavoorchatram ,Bakrit ,
× RELATED பைக்குகளில் மதுபானம் கடத்திய 4 பேர் கைது