×

1,592 உதவிப் பிரிவு அலுவலர்களுக்கு பதவி உயர்வு

புதுடெல்லி: 1,592 உதவிப் பிரிவு அலுவலர்களுக்கு பிரிவு அலுவலர்களாக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதுகுறித்து ஒன்றிய பணியாளர் நலன், ஓய்வூதியங்கள் பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை இணைஅமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் கூறும்போது, “பணியாளர் அமைச்சகத்தின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையில் பணியாற்றும் பணியாளர்களை ஊக்கப்படுத்தவும், நீண்டகால கோரிக்கைகளின் அடிப்படையிலும் ஒன்றிய பாஜ அரசு பல்வேறு பதவி உயர்வுகளை அறிவித்து வருகிறது.

அதன்படி தற்போது 1,592 உதவிப் பிரிவு அலுவலகர்களுக்கு பிரிவு அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பதவி உயர்வு நியமன ஆணைகள் விரைவில் அளிக்கப்படும். மீதமுள்ள 2,000 பேருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் பதவி உயர்வு அளிக்கப்படும். கடந்த ஆண்டில் 9 ஆயிரம் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டுகளில் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் 4,000 பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன” என்று தெரிவித்தார்.

The post 1,592 உதவிப் பிரிவு அலுவலர்களுக்கு பதவி உயர்வு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Minister ,Jitendra Singh ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...