×

‘அன்பின் கடையை திறங்கள்’ பாஜவுக்கு போட்டியாக காங். அனிமேஷன் வீடியோ: டிவிட்டரில் வெளியீடு

புதுடெல்லி: குஜராத் முதல்வராக இருந்த மோடி, கடந்த 2014ல் பிரதமராக பதவியேற்றதில் இருந்து தற்போது வரை கொண்டு வந்த நலத்திட்டங்கள், நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கு குறித்து 2024 மக்களவை தேர்தலை குறிவைத்து பாஜ கட்சி சமீபத்தில் அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இதற்கு போட்டியாக தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் அனிமேஷன் வீடியோ அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 1 நிமிடம் 43 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ, பிரதமர் மோடி ‘அதிகாரம், மீடியா, ஜனநாயகம்’ ஆகியவற்றை சங்கிலியால் கட்டி குதிரை வண்டியில் செல்வதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்து, முஸ்லிம் இடையே மோதலை ஏற்படுத்துவது போலவும் காட்சிகள் தொடங்குகின்றன.

பின்னர் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஒற்றுமையை ஏற்படுத்துவது போலவும், அதானி விவகாரத்தில் ரூ.20,000 கோடி குறித்து கேள்வி எழுப்புவதாகவும் பாடல் அமைந்துள்ளது. பின்னர் லாரியில் பயணிக்கும் ராகுல் வெறுப்பை விற்கும் சந்தையில் அன்பை பரப்பும் கடையை திறப்பதாக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோவிற்கு ‘அன்பின் கடைகளை திறந்திடுங்கள்’ என பெயரிடப்பட்டுள்ளது.

The post ‘அன்பின் கடையை திறங்கள்’ பாஜவுக்கு போட்டியாக காங். அனிமேஷன் வீடியோ: டிவிட்டரில் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Twitter ,New Delhi ,Modi ,Chief Minister of ,Gujarat ,
× RELATED கேரளாவில் மின்னணு இயந்திர பிரச்னை...