×

ஜூன் 29ம் தேதி பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ஜூன் 29ம் தேதி பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். 29/06/2023 அன்று பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 28/06/2023 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 28/06/2023 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்திக் கொண்டு தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post ஜூன் 29ம் தேதி பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Special Buses Movement ,Bakreet and Sequential Holidays ,Tamil Nadu Government ,Chennai ,Special Buses Movement on ,Bakreet and Series ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...