×
Saravana Stores

போடியிலிருந்து பரமசிவன் கோயிலுக்கு செல்லும் மண்சாலையை விரிவுபடுத்தி தார்சாலை அமைக்க வேண்டும்: மினி பஸ் இயக்கவும் பக்தர்கள் கோரிக்கை

போடி: போடியிலிருந்து மேற்கு திசையில் உள்ள பரமசிவன் மலை அடிவாரக் கோயிலுக்கு இர ண்டு கிலோ மீட்டர் தூர மண் சாலையை தார்சாலையாக மாற்றி மினி பஸ் இயக்க வேண்டும் என பக்த ர்கள் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், போடி நாயக்கனூரில் 33 வார்டுகளை கொண்டு தேர்வு நிலை நகராட்சியாக செயல்பட்டு வந்துகொண்டிருக்கிறது. இந்த நகர் பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேலான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். போடியிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 2 கிமீ தொலைவில் பரமசிவன் மலை கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது.

இந்த கோயில் காசியம்பதி என்று சொல்லப்படும் தென் திருவண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பரமசிவன் மலைகோயிலில் சித்திரைப்பெருந்திருவிழா 8 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இக்கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.மேலும் இந்த கோயில் மலை அடி வாரத்தில் தென்மேற்கு பகுதியில் போடி 33 வார்டுகளுக்கு சுவையான குடிநீர் வழங்குவதற்கு ஆங்கிலேயர் காலத்தில் 110 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட 30 திற்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட பவர் ஹவுஸ் அமைக்கப்பட்டு குரங்கணியிலிருந்து சாம்பலாற்று மெகா தடுப்பணையிலிந்து எடுக்கப்படும் ஊற்றுநீரை கொட்டகுடி தேன் நீரை பொதுமக்களுக்கு தினம் தோறும் விநியோகிக்கப்பட்டு வரும் மெகா நீர்த்தேக்கமும் போடி சுப்புராஜ் நகர் பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் மண் சாலை பரமசிவன் மலை கோயில் அடிவாரம் சென்றடைகிறது.

இந்த கோயிலுக்கு போடி நகரப் பொதுமக்கள், வெளியூர்களி லிருந்தும் எவ்வித பாகு பாடின் றி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகளவில் நடந்து சென்று தரிசனம் வருகின்றனர். இதற்கிடையில் கோயிலிருந்து சுப்புராஜ்நகர் புது காலனிக்கு இடையே பெரும் கால்வாய் ஓடுவதால் மழை காலங்களில் பொதுமக்கள் விவசாயிகள் கடப்பது பெரும் சிரமமாக உள்ளது. அந்த இடத்தில் கட்டாயமாக பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வரு கிறது. மேலும் இரண்டு கிலோ மீட்டரில் உள்ள மண் சாலையினை விரிவுபடுத்தி தார்சாலையாக புதுப்பித்து தர வேண்டும் தொடர்ந்து போடி நகர பொதுமக்களுக்கு தினம் தோறும் கோயிலுக்கு சென்று திரும்புவதற்கு மினி பஸ் கட்டாயம் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் அருகில் சுப்புராஜ் நகர் பகுதியில் புதிய ரயில்வே நிலையமும் செயல்பட தொடங்கி விட்டதால் இந்த மினி பஸ் ரயில்வே நிலையம் மற்றும் பரமசிவன் கோயில் வரை வட்ட பேருந்தாக இயக்கப்பட வேண்டும் என்பது முக்கியத்துவமாக உள்ளது. இந்த வட்ட பேருந்து இயக்கப்படும் போது டி.வி.கே நகர், ரயில்வே ஸ்டேஷன், புதூர், சுப்புராஜ் நகர், சுப்புராஜ் நகர் புது காலனி மற்றும் சிபிஏ கல்லூரி, பரமசிவன் மலை அடி வாரம் கோயில் மற்றும் தேவர் காலனி உள்ளிட்ட பகுதி மக்கள், சுற்றியுள்ள விவசாய பெருமக்கள் உட்பட சுமார் 3000க்கும் மேற்பட்டவர்கள் மிகுந்த பயன் அடைவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதி மக்கள் முழுவதும் பயன்படு வதற்கு இரண்டு கிலோமீட்டர் மண் சாலை புதுப்பித்து பாலம் அமைத்து துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘போடி நகர பொதுமக்கள் பெரிதும் விரும்பி வணங்கும் இந்த கோயிலுக்கு பொதுமக்கள் தினந்தோறும் நடந்து செல்வதை தவிர்க்கும் வகையில் தார்சாலை வசதி செய்து கொடுத்து மினிபஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து தரும் பட்சத்தில் பொது மக்களும் மிகுந்த பலன் அடைவார்கள்’’என்றார். இதுகுறித்து போடி நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் கூறுகையில், ‘‘சுப்புராஜ் புதுக்காலனியிருந்து பரமசிவன் கோயில் மலை அடிவாரம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற நகர்மன்றத்தில் தீர்மானமாக கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து அரசின் கவன த்திற்கு கொண்டு சென்று வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் மூலம் முதலமைச்சரிடம் நேராக கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்’’என்றார்.

வருடத்தில் 8 நாள் மட்டுமே பஸ் வசதி
போடி அருகே உள்ள பரமசிவன் கோயிலில் சித்திரை மாதம் 2ம் தேதி சித்திரை பெருந்திருவிழா தொடங்கும். இங்கு இந்த திருவிழா 8 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த சித்திரை பெருந்திருவிழாவினை காண அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் தேனி மாவட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்காக போடி பஸ் நிலையத்திலிருந்து அரசு சிறப்பு பஸ்கள் தொடர்ந்து 8 நாட்களுக்கு இயக்கப்படும். இந்த பஸ் போடி புதூர் கடந்து முந்தல் சாலையில் சென்று கல்லூரிக்கு அருகில் உள்ள பிரிவில் திரும்பி பரமசிவன் மலை அடிவாரம் சென்றடையும். பின்னர் கோயிலில் இருந்து பக்தர்களை ஏற்றிகொண்டு வந்த பாதையில் திரும்பி போடி பஸ் நிலையம் சென்று சேரும். வருடத்தில் 365 நாட்களில் 8 நாட்கள் போக 357 நாட்களுக்கு பஸ் போக்கு வரத்து இருக்காது. மேலும் இதுகுறித்து நகர்மன்ற தலைவர் ரூ.1.50 கோடி நிதியும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சரிடம் மனு கொடுத்து கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

The post போடியிலிருந்து பரமசிவன் கோயிலுக்கு செல்லும் மண்சாலையை விரிவுபடுத்தி தார்சாலை அமைக்க வேண்டும்: மினி பஸ் இயக்கவும் பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mansala ,Bodi ,Paramasivan temple ,darsala ,Paramasivan hill temple ,Dinakaran ,
× RELATED புகையிலை விற்றவர் கைது