×

திருமயம் அருகே துர்வாசபுரம் காலபைரவர் கோயிலில் ஆனி மாத தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

திருமயம்: திருமயம் அருகே நடைபெற்ற காலபைரவர் கோயில் ஆனி மாத திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துர்வாசபுரம் கால பைரவர் கோவிலில் ஆனி மாத திருமஞ்சனம் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இதனிடையே நடப்பாண்டு ஆனி திருவிழா கடந்த 18 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெற்று வந்தது. மேலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாணிக்க வாசகர் சிறப்பு அலங்காரத்தில் பல்லாக்கில் வைத்து வீதி உலா நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 7ம் நாள் திருவிழாவை முன்னிட்டு மாலை விநாயகர், நடராஜர், சிவகாமி, அம்பாள், மாணிக்க வாசகர், அழகு நாச்சியார் ஆகிய பரிவார தெய்வங்கள் சப்பர வீதி உலா நடைபெற்றது. இதனிடையே நேற்று முன் தினம் 8ம் நாள் திருவிழாவில் சிப்பந்திகள் மண்டகப்படி நடைபெறுகிற்றது. இந்நிலையில் நேற்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை 9 மணி அளவில் நல்ல நேரத்தில் நடராஜர்ருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் பல்லாக்கி தூக்கி வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தினார்.

அதனை தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் பக்தர்கள் மாலை 3.30 மணி அளவில் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது கோயிலின் நான்கு முக்கிய ரத வீதிகளையும் சுற்றி வந்தது. அப்போது பக்தர்கள் ஆங்காங்கே நின்று அர்ச்சனை செய்து வழிபட்டனர். தேரடியை அடைந்தடைந்தவுடன் பக்தர்கள் கைதட்டி கரகோஷம் எழுப்பினார்கள். இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இந்நிலையில் விழாவின் கடைசி நாளான இன்று (27ம் தேதி) காப்பு நிறைவு விழா நடைபெறுகிறது.விழா ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகளும் பொதுமக்களும் செய்து இருந்தனர்.

The post திருமயம் அருகே துர்வாசபுரம் காலபைரவர் கோயிலில் ஆனி மாத தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் appeared first on Dinakaran.

Tags : Ani ,Durvasapuram Kalabiravar temple ,Tirumiyam ,Tirumayam ,Cheroutham ,Kalapiravar ,Temple ,Ani Month Festival ,Ani's ,Thirumariam ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ம் தேதி...