×

பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தை ஒருவர் செய்திருப்பதாக கருதினால் கைது செய்ய அதிகாரம் உண்டு: அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார்மேத்தா வாதம்

 

 

சென்னை: செந்தில் பாலாஜி வழக்கில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம் செய்துள்ளார். ஆட்கொணர்வு மனுவில் உள்ள வரம்புகள் குறித்து விளக்கி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் செய்து வருகிறார். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்டமோ மிக கடுமையான காப்பு விதிகளை கொண்டுள்ளது. கைது நடவடிக்கை சட்டவிரோதமானதல்ல என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்த பிறகு அது சட்டபூர்வமாக கருதப்படும். கைது நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரும் வரை கைது சட்டபூர்வமானதாகவே கருதப்படும்.

பிஎம்எல்ஏ சட்டப்பிரிவுகள் மிகவும் கடுமையாக இருப்பதை அதுவே ஒரு நடைமுறை சட்டம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கு விசாரணையின்போது தான் அவர் கைது செய்யப்பட்டதற்கான கரணம் சீலிடப்பட்ட உரையில் இருந்து எடுக்கப்படும். ஆட்கொணர்வு மனு விசாரணையின் பொது ஒருவரை கைது செய்ததற்கு போதிய ஆவண ஆதாரங்கள் உள்ளதா என்பதை உயர்நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். அமைச்சரை கைது செய்து 10 மணி நேரத்துக்குள் கைதுக்கான ஆவணத்தை பெற அவர் மறந்து விட்டார் என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

கைது செய்ததற்கான ஆவணத்தில் ஜூன் 14 காலை 1.39 மணிக்கு கையெழுத்திட அமைச்சர் மறுத்துவிட்டதாகவும் அமைச்சரை காவலுக்கு அனுப்பக் கோரும் மனு ஜூன் 14 பகல் 11.30-ல் இருந்து 12 மணிக்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியுள்ளது. மாவட்ட அமர்வு நீதிபதி மாலை 3.30 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து அமைச்சரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உத்தரவு அளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி ஒருவரை கைது செய்து விட்டால் ஆட்கொணர்வு மனு மூலம் நிவாரணம் பெற முடியாது. ஒருவரை கைது செய்யும்போது காரணத்தை முடி முத்திரையிட்ட உரையில் வைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரிவு 19 கூறுகிறது.

நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம் என்று எந்த நீதிமன்றமும் தீர்ப்பு அளிக்கவில்லை. கைது சட்டவிரோதமானதாக இருந்தாலும் எந்த கட்டத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியும் என்று துஷார் மேத்தா கேள்வி எழுப்பியுள்ளார். பிஎம்எல்ஏ சட்டத்தின் 65, 71-வது பிரிவை விளக்கி துஷார் மேத்தா வாதம் செய்துள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட பிரிவுகளுக்கு உட்படாத காதாக இருந்தால் மட்டுமே குற்றவியல் நடைமுறைச் சட்டம் பொருந்தாது. கைது சட்டபூர்வமானதாகி விட்டால் ஆட்கொணர்வு மனு மூலம் உயர்நீதிமன்றம் அதில் தலையிட முடையது என்று துஷார் மேத்தா வாதம் செய்துள்ளார்.

நீதிமன்ற காவலுக்கு அனுப்பக்கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கைதியை காவலுக்கு அனுப்பிய நடவடிக்கையை மனுதாரர் கேள்விக்கு உள்ளாக்கவில்லை என்று வாதம் செய்து வருகிறார். ஆட்கொணர்வு மனுவிலும் கூட நீதிமன்ற காவலுக்கு அனுப்பியதை எதிர்த்து கேள்வி எழுப்பவில்லை. நீதிமன்றம் காவலுக்கு அனுப்பியதை மனுதாரர் புத்திசாலித்தனமாக எதிர்க்கவில்லை. மருத்துவமனையில் விசாரித்து கொள்ளலாம் என்பது மனுதாரருக்கு சாதகமானதாக உள்ளதால் எதிர்க்கவில்லை. குற்றவியல் நடைமுறைசட்டத்தின் 167-வது பிரிவுக்கு எந்த வகையிலும் பிஎம்எல்ஏ சட்டப்பிரிவு 19 முரண்பாடாக இல்லை. ஒரு நபர் போலி காவலில் இருக்கும்போது ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்புமாறு கோருவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு.

ஜாமின் மனு தாக்கல் செய்திருப்பதே அமைச்சர் சட்டபூர்வமான காவலில்தான் உள்ளார் என்பதை காட்டுகிறது. சட்டவிரோத காவலில் இருப்பதாக ஒருவர் கருதினால் அவர் ஏன் ஜாமின் மனு தாக்கல் செய்ய வேண்டும். குற்றவியல் நடைமுறைசட்ட பிரிவு 4, உட்பிரிவு2-ன் படி பிஎம்எல்ஏ சட்டப்பிரிவுகளுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தை ஒருவர் செய்திருப்பதாக கருதினால் கைது செய்ய அதிகாரம் உண்டு என்றும் கைதுக்கான காரணத்தை கூடிய விரைவில் தெரிவிக்க வேண்டுமே தவிர உடனே கூற வேண்டிய அவசியமில்லை. குற்றவியல் நடைமுறைசட்டத்தின் பிரிவு 41ஏ மிகவும் அடிப்டையானதாகும் என்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம் செய்தார்.

 

 

The post பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தை ஒருவர் செய்திருப்பதாக கருதினால் கைது செய்ய அதிகாரம் உண்டு: அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார்மேத்தா வாதம் appeared first on Dinakaran.

Tags : BMLA ,Chennai ,Dushar ,Senthil Balaji ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...