×

பட்டுக்கோட்டையில் தூய்மைப்பணியாளர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயல்விளக்கம் கோடை விழா தென்னக பண்பாட்டு மையத்தில் கைவினை பொருட்கள் கண்காட்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற கோடை விழாவில் பல்வேறு மாநில கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் இந்திய அரசு கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மையமாகும், இம்மையத்தின் நோக்கமாக கிராமப்புற பாரம்பரிய கலைகளையும் மற்றும் பாரம்பரிய பழங்குடி கலைகளையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் தேவாரப் பயிற்சி, யோகா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது, இதனையடுத்து தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் கோடை விழா கடந்த 21ம் தேதி தொடங்கியது, 5 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் இந்தியாவின் 15 மாநிலங்களை சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களது மாநில பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது, இதில் கர்நாடகா, கேரளா மாநில ஆர்கானிக் பொருட்கள், நாகாலாந்து, அசாம் மாநில அலங்கார மலர்கள் மற்றும் அசாம் மாநில புடவை ரகங்கள், தெலுங்கானா மாநில ஜீவல்லரி, கர்நாடகா மாநில பிளாக் மெடல் வகைகள், கேரளா மாநில மூங்கிலால் ஆன வீட்டு உபயோக பொருட்கள், மற்றும் ஒடிசா மாநில அழகிய பெல் மெடல் பொருட்கள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன, இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு

The post பட்டுக்கோட்டையில் தூய்மைப்பணியாளர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயல்விளக்கம் கோடை விழா தென்னக பண்பாட்டு மையத்தில் கைவினை பொருட்கள் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Pattukottai Summer festival Handicrafts ,Southern Cultural Centre ,Thanjavur ,Thanjavur Southern Cultural Centre ,Thanjavur… ,Pattukottai Summer Festival Southern Cultural Center Handicrafts Exhibition ,
× RELATED துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி...