×

திண்டிவனத்தில் பட்டப்பகலில் கடை கல்லாப்பெட்டியை உடைத்து பணம் திருட்டு

திண்டிவனம், ஜூன் 27: திண்டிவனத்தில் பட்டப்பகலில் கடையின் கல்லாப்பெட்டியை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் பெலாகுப்பம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆட்சி (65). இவர் திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியில் தண்ணீர் கேன் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மீண்டும் நேற்று காலை கடைக்கு வந்தவர் கடையை திறந்து, அருகில் உள்ள ஓட்டலுக்கு தண்ணீர் கேன் எடுத்து சென்றார். மீண்டும் கடைக்கு வந்து பார்த்த போது கடையின் கல்லாப்பெட்டியை உடைத்து அதிலிருந்த 6 ஆயிரத்து 400 ரூபாயை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் கடையை வந்து பார்த்து விசாரணை செய்தனர். மேலும் பட்டப்பகலில் கடையில் இருந்த கல்லாப்பெட்டியை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டிவனத்தில் பட்டப்பகலில் கடை கல்லாப்பெட்டியை உடைத்து பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Dindivan ,Dindivanam ,
× RELATED திண்டிவனத்தில் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது!!