×

கலெக்டர் துவக்கி வைத்தார் வேதாரண்யத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது. வேதாரண்யத்தில் கடலோர பாதுகாப்பு குழும. காவல்துறை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தர், வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரியில் இருந்து துவங்கி நாகை சாலை, வடக்கு விதி, கிழவீதி, மேலவீதியாக சென்று ராஜாஜி பூங்கா வந்தடைந்தது. பேரணியில் மாணவ-மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மதுவுக்கும், போதை பொருள்களுக்கும் யாரும் அடிமையாகக் கூடாது என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை மாணவ- மாணவிகள் எழுப்பினர். இந்த பேரணியில் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ராஜசேகர், அரசு கலைக் கல்லூரி முதல்வர் குமரேச மூர்த்தி, கல்லூரி பேராசிரியர்கள் பிரபாகரன், ராஜா, கடலோர காவல் குழும போலீசார், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கலெக்டர் துவக்கி வைத்தார் வேதாரண்யத்தில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Collector ,Vedaranyam ,Coast Guard Group ,Vedaran ,Dinakaran ,
× RELATED சிறுமியை கடத்திய கண்டக்டர் கைது: ரயிலில் மடக்கிய போலீஸ்