×

எல்ஐசியின் தன் விருத்தி புதிய திட்டம் அறிமுகம்

சென்னை: எல்ஐசி தன் விருத்தி என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்.ஐ.சி ஆப் இந்தியா, ‘எல்ஐசியின் தன்விருத்தி திட்டம்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 23ம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 23.6.2023 முதல் 30.9.2023 வரை மட்டுமே கிடைக்கும் குறுகிய கால திட்டம். காப்பீடு மற்றும் சேமிப்பின் கலவையான எல்.ஐ.சி.யின் தன் விருத்தி பாலிசி முதிர்வு தேதியில் பாலிசிதாரருக்கு அடிப்படை காப்பீடு தொகையுடன் உத்தரவாத கூடுதல் தொகையும் வழங்கக்கூடிய பங்குச்சந்தை சாராத தனிநபர் சேமிப்பு ஒற்றை பிரீமிய ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும்.

பாலிசி காலத்தில் காப்பீடுதாரருக்கு எதிர்பாராதவிதமாக இறப்பு நேர்ந்தால் இத்திட்டம் அவரின் குடும்பத்தினருக்கு பொருளாதார உதவி வழங்குகிறது. பாலிசி முதிர்வு தேதியில் காப்பீட்டுதாரருக்கு உத்தரவாதமான மொத்த தொகை வழங்கப்படும். ஒற்றைப் பிரீமிய பாலிசி என்பதால் எதிர்காலத்தில் பிரீமியம் செலுத்தவேண்டிய அவசியமில்லை. மேலும் காலாவதியாகும் வாய்ப்பும் இல்லை. உயர் காப்பீட்டுத்தொகை அதிகப்படியான உத்தரவாத கூடுதல் தொகை வழங்கப்படும். ‘இறப்பு காப்பீடுத் தொகை’ என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத்தொகையின் அட்டவணைப் பிரீமியத்தின் 1.25 மடங்கு (தேர்வு 1) அல்லது 10 மடங்கு (தேர்வு 2) சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த இரண்டியில் ஏதேனும் ஒன்றை காப்பீட்டுத்தாரர் தேர்ந்தெடுக்கலாம். இத்திட்டத்தின் பாலிசி காலம் 10, 15 அல்லது 18 ஆண்டுகள். முதல் 8 வயதுக்குள் மாறுபடும். குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத்தொகை ரூ,1,25,000 மற்றும் அதன் ரூ.5000த்தின் மடங்குகள்.

காப்பீட்டு பாதுகாப்பு தொடங்கிய பிறகு ஆனால் முதிர்வு தேதிக்கு முன்னர் பாலிசி காலத்தில் இறப்பு நேரிட்டால் ‘இறப்புக் காப்பீட்டுத் தொகை’ உத்தரவாத கூடுதல் தொகையுடன் வழங்கப்படும். பாலிசி காலம் முழுவதும் ஒவ்வொரு பாலிசி வருட முடிவிலும் உத்தரவாத கூடுதல் தொகை சேர்க்கப்படும். பாலிசிதாரர் தேர்ந்தெடுத்த தேர்வு அடிப்படை காப்பீட்டு தொகை மற்றும் பாலிசி காலத்திற்கேற்ப ஒவ்வொரு ரூ.1000 அடிப்படை காப்பீட்டுத் தொகைக்கும் உத்தரவாத கூடுதல் தொகை ரூ.60 ரூ.75 (தேர்வு 1) மற்றும் குறைபாட்டு பயன் மற்றும் எல்ஐசியின் புதிய டெர்ம் அஷ்யூரன்ஸ் ஆகியவற்றையும் தேவைப்பட்டால் தேர்வு செய்யலாம். முதிர்வு/ இறப்புத்தொகையை 5 வருடங்களுக்கு மாத/ காலாண்டு/ அரையாண்டு அல்லது ஆண்டு தவணைகளாக பெற்றுக்கொள்ளலாம். பாலிசி தொடங்கி 3 மாதங்களுக்குப் பிறகு கடன் பெறும் வசதி உண்டு. இந்த பாலிசியை முகவர்/ மற்ற ஆயுள் காப்பீடு இடைத்தரகர்கள், பொதுமக்கள் பயன்பாட்டு மையங்கள் மற்றும் www.licindia.in என்ற வலைதளத்தின் வழியாக சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆன்லைனிலும் பெறலாம்.

The post எல்ஐசியின் தன் விருத்தி புதிய திட்டம் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : LIC ,CHENNAI ,India ,Dinakaran ,
× RELATED சென்னையில் 18 மெட்ரோ ரயில்...