×

அதிமுக ஆட்சிக்காலத்தில் மின்சாரவாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.61 லட்சம் மோசடி: நேர்முக தேர்வு நடத்துவதாக நடந்த நாடகம்

சென்னை: சென்னை, முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் மோகன் (56) இவர், ஆவடி காவல் ஆணையர் அருணிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், தனது மகன், மகள், உறவினர் மற்றும் நண்பர்கள் உட்பட 10 பேரிடம் ரூ.61 லட்சத்து 50 ஆயிரம் பணமாக பெற்றுக்கொண்டு மின்சார வாரியத்தில் போலி பணி நியமன ஆணை வழங்கியதாக கூறியிருந்தார். விசாரணையில், சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ் (55), குன்றத்தூரைச்சேர்ந்த சக்திவேல், (49), சென்னை, சிந்தாரிப்பேட்டைச்சேர்ந்த விஷ்வேஸ்வரர் (32) என்பதும் அவர்கள் பணம் வாங்கி ஏமாற்றியதும் தெரியவந்தது. மேலும் தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் நேர்முக தேர்வு நடத்துவதாக நாடகமாடி, போலியான பணி நியமன ஆணை வழங்கியது தெரியவந்தது. ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூவரையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post அதிமுக ஆட்சிக்காலத்தில் மின்சாரவாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.61 லட்சம் மோசடி: நேர்முக தேர்வு நடத்துவதாக நடந்த நாடகம் appeared first on Dinakaran.

Tags : Electricity Board ,AIADMK ,Chennai ,Mohan ,Mughalivakam, Chennai ,Avadi ,Police Commissioner ,Arun ,
× RELATED மின் அழுத்த குறைபாடு பிரச்னையை...