×

எத்தனாலில் இயங்கும் புதிய வாகனங்கள் அறிமுகம்: ஒன்றிய அமைச்சர் கட்கரி அறிவிப்பு

மும்பை: முழுவதும் எத்தனாலில் இயங்கும் வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று ஒன்றிய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், ‘‘ எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே தயாரிப்போம் என்று மெர்சிடஸ் பென்ஸ் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கும் வாகனங்களை கொண்டு வருகிறோம். பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஹிரோ ஸ்கூட்டர்கள் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும். டொயோட்டா நிறுவனம் தனது எத்தனாலில் இயங்கும் கேம்ரி காரை ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்போகிறது. இது 100 சதவீதம் எத்தானலில் இயங்குவதுடன் 40 சதவீத மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும். பெட்ரோலுடன் ஒப்பிட்டு பார்த்தால் எத்தனால் லிட்டருக்கு 60 ரூபாயாக இருக்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.120 வரை இருக்கிறது. 40 சதவீதம் மின் உற்பத்தி செய்வதால் சராசரியாக லிட்டருக்கு ரூ.15மட்டும் தான் செலவு ஆகும்” என்றார்.

The post எத்தனாலில் இயங்கும் புதிய வாகனங்கள் அறிமுகம்: ஒன்றிய அமைச்சர் கட்கரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ethanol ,Union Minister ,Kadkari ,Mumbai ,Union Minister of Road Transport and Highways ,Nitin ,Ethanal ,Dinakaran ,
× RELATED சேலம்-சென்னை இடையே விரைவில் மாலை நேர...