×

செயற்கை கருவூட்டலில் இரட்டைக்குழந்தைகள் விந்தணுவை மாற்றியதால் ரூ.1.50 கோடி அபராதம்: நுகர்வோர் ஆணையம் அதிரடி

புதுடெல்லி: செயற்கை கருவூட்டலில் தவறான நபரின் விந்தணுவைப் பயன்படுத்திய மருத்துவமனைக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற தனியார் மருத்துவமனையில் தம்பதி சிகிச்சை பெற்றனர். 2009ம் ஆண்டு ஜூன் மாதம் அவர்களுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. அப்போது நடந்த மரபணு பரிசோதனை தந்தையின் ரத்த டிஎன்ஏவுடன் ஒத்துப்போகவில்லை. மேலும் அவரது விந்தணு பயன்படுத்தப்படவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. செயற்கை கருவூட்டல் முறையில் உள்ள விதிமுறைகளை மருத்துவமனை பின்பற்றாமல் வேறு நபரின் விந்தணுவை பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து தம்பதியினர் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ரூ.2 ேகாடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை உறுப்பினர் எஸ்எம் காந்திகர் பிறப்பித்த உத்தரவில்,’ செயற்கை கருவூட்டலில் தவறான விந்தணுவை பயன்படுத்திய மருத்துவனைக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கிறேன். செயற்கை கருவூட்டல் தொடர்பான மருத்துவ நடைமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

The post செயற்கை கருவூட்டலில் இரட்டைக்குழந்தைகள் விந்தணுவை மாற்றியதால் ரூ.1.50 கோடி அபராதம்: நுகர்வோர் ஆணையம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Consumer Commission ,New Delhi ,National Consumer Complaint ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு