×

ஆனித்திருமஞ்சன தரிசனம்

ஆனித்திருமஞ்சனத்தையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று முன்தினம் தேர்த்திருவிழா நடந்தது. பின்னர் அன்றிரவு ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. சித்சபையில் உற்சவ ஆச்சாரியாரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டது. பின்னர் பஞ்சமூர்த்திகள் நான்கு வீதிகளிலும் வீதியுலா வந்தது. பின்னர் பிற்பகல் 2.15 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர். அதைத்தொடர்ந்து சித்சபா பிரவேசம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். இன்றுடன் பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

The post ஆனித்திருமஞ்சன தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Anithirumanjana Visionam ,Chidambaram Natarajar ,Anitirimanjana ,Natarajamurth ,Sivakamasundari Ampara ,Anithirimanjana Visition ,
× RELATED சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ...