×

பதவி விலக மதிமுக எம்.எல்.ஏ. பூமிநாதன் முடிவு?..பரபரப்பு தகவல்கள்

 

மதுரை: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விடலாம் என நினைப்பதாக மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பூமிநாதன் பேசினார். மதுரை மாநகராட்சியில் உள்ள 19-வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி மற்றும் ஆணையர் பிரவின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தமாக உள்ள மாமன்ற உறுப்பினர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு மாநகராட்சியின் எந்தவித வார்டிலும் எந்தவித அடிப்படை பணிகளும் நடைபெறவில்லை என குற்றச்சாட்டை தொடர்ச்சியாக வைத்துள்ளனர். அதே குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த கூட்டத்திலும் முன்வைத்தார்கள்.

குறிப்பாக மாநகராட்சியினுடைய துணைமேயர் நாகராஜன் பேசுகையில் அவருடைய 80-வது வார்டில் எந்தவொரு அடிப்படை பணிகளும் மேற்கொள்ளவில்லை எனவும் கவலையுடன் பதிவிட்டார். மேலும் பணிகள் தொடர்பாக எந்தவொரு கேள்விகளுக்கும் இதுவரை அதிகாரிகள் பதில் அளிக்காமல் இருக்கிறார்கள் என்ற குற்றசாட்டையும் முன்வைத்திருந்தார். மாநகராட்சியில் கவுன்சிலர்களிடையே பாகுபாடுகளை மாநகராட்சி நிர்வாகம் பார்ப்பதாகவும், இனி பாகுபாடு இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்திருந்தார். தொடர்ந்து மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியின் மதிமுக உறுப்பினர் எம்.எல்.ஏ. பூமிநாதன் கூட்டத்தை பார்வையிட வந்திருந்தார்.

அவருடைய தொகுதிக்குள் இருக்கக்கூடிய மாநகராட்சியின் வார்டு நிலை தொடர்பான கோரிக்கையை முன்வைத்து பேசினார். தொகுதி மக்கள் வழிமறித்து கேள்வி எழுப்பும் போது வேதனையாக இருக்கிறது எனவும் எம்.எல்.ஏ. பூமிநாதன் தெரிவித்தார். அப்போது பேசிய அவர் தனது தெற்கு தொகுதி உட்பட்ட வார்டுகளில் எந்தவித அடிப்படை பணிகளும் மாநகராட்சியால் மேற்கொள்ளபடவில்லை எனவும் பலமுறை அதிகாரிகளிடம் மற்றும் மேயரிடமும் கோரிக்கை விடுத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தும் தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை கூட ராஜினாமா செய்துவிடலாம் என்ற நினைக்கிற சூழல் இருப்பதாக தெரிவித்தார்.

ஏற்கனவே மதிமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் தகவலை பதிவு செய்தார். ஒவ்வொரு மாமன்ற கூட்டத்திலும் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை தொடர்ந்து கோரிக்கைகளை தெரிவித்தார். இந்த நிலையில் இன்றைய தினம் மாநகராட்சினுடைய துணை மேயர் நாகராஜன் கருத்தும் எம்.எல்.ஏ. பூமிநாதன் கருத்தும் மிகுந்த கவனத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கூட்டத்தின் போதும் அடிப்படை பிரச்சினைகளை சார்ந்த குற்றச்சாட்டுகள் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

The post பதவி விலக மதிமுக எம்.எல்.ஏ. பூமிநாதன் முடிவு?..பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : MDMK ,Bhoominathan ,Madurai ,Madurai Corporation Council ,MLA ,Dinakaran ,
× RELATED மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின்...