×

ஓடிசாவில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 12 பேர் பலி; 8 பேர் காயம்… ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

புபனேஷ்வர் : ஓடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஓடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தனியார் பேருந்தில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது கஞ்சம் மாவட்டத்தின் திகபஹண்டி காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியில் பேருந்து சென்று கொண்டு இருந்த போது, இரவு 1 மணியளவில் ராயகடா மாவட்டத்தில் உள்ள குடாரியில் இருந்து எதிர் திசையில் வந்த பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எட்டு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக பெர்ஹாம்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்த அனைவரும் தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே பேருந்து விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

The post ஓடிசாவில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 12 பேர் பலி; 8 பேர் காயம்… ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Bubaneshwar ,Odissa's Ganjam district ,
× RELATED ஒடிசாவில் ஆட்டோ, பைக் மீது அதிவேகமாக...