×

அரியலூர் அரசு சிமென்ட் நிறுவன ஆலை

அரியலூர்: அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு சிமெண்ட நிறுவன ஆலை வளாகக் கூட்ட அரங்கில் புதிய ஆலை மேம்படுத்துவது குறித்து அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் தொழில்துறை அமைச்சர் ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது.முன்னதாக, ஆலையில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் பணியாளர் குடியிருப்பில் குடியிருப்போர் பயன்பாட்டிற்காக சிறுவர் பூங்காவினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு சிமென்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் கண்ணன், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா , ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய ஆலையை மேம்படுத்துதல் மற்றும் பராமரிப்பு பணிகள், தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், விற்பனையை அதிகப்படுத்துதல் ஆகியவைகள் குறித்து அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்தார். கலந்தய்வுக் கூட்டத்தில் துணை பொது மேலாளர் ரவிச்சந்திரன், அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர்கணேஷ, வட்டாட்சியர்கள் கண்ணன், கதிரவன், ஆலை அனைத்து பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அரியலூர் அரசு சிமென்ட் நிறுவன ஆலை appeared first on Dinakaran.

Tags : Ariyalur Govt Cement Company Plant ,Ariyalur ,Ariyalur District ,Tamil Nadu ,Government ,Cement ,Company ,Ariyalur Government ,Dinakaran ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...