×

சீர்காழி அருகே வேதராஜபுரம் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

சீர்காழி: சீர்காழி அருகே வேதராஜபுரம் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வேதராஜபுரம் கிராமத்தில் புகழ் பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் உள்ளது. முன்னொரு காலத்தில் திருமங்கை ஆழ்வாருக்கு அடைக்கலம் தந்ததால் இவருக்கு அடைக்கலம் காத்த அய்யனார் என அழைக்கப்படுகிறார். இந்த கோயிலில் விநாயகர், அகோர வீரபத்திரர், தூண்டிக்கார சாமி, பெரிய உடையார், சின்ன உடையார் உள்ளிட்ட பரிவார சாமி சன்னதிகள் திருப்பணி நிறைவடைந்த நிலையில் கடந்த. 22ம் தேதி கணபதி பூஜை உடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. பூஜைகளை திருவெண்காடு ஸ்வேதாரணேஸ்வரர் கோயில் அர்ச்சகர் சங்கர் கணேஷ் சிவாச்சாரியார் தலைமையில் 25க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் இதில் பங்கேற்றனர். நேற்று காலை 6ம் கால யாக பூஜை தொடங்கியது. அப்போது கோ பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்டவைகள் நடந்தன. பின்னர் மகாபூர்ண பகுதி செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து மேளம் தாளம் முழுங்கிட சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய யாக குடங்களை ஊர்வலமாக கோபுரத்திற்கு கொண்டு சென்று கோபுர கலசங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் அனைத்து சன்னதிகளுக்கும் புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டு குடமுழுக்கு நடந்தது. அப்போது கோபுரத்திற்கு மேல் கருடன் வட்டமிட்டதை கண்ட பக்தர்கள் ஐயப்பா ஐயப்பா என சரண கோஷமிட்டனர். பின்னர் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழுவினர், குலதெய்வ பக்தர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர். திருவெண்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

The post சீர்காழி அருகே வேதராஜபுரம் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Ayanar Temple ,Kumbabishekam ,Vedarajapuram ,Seerkazhi ,Kumbaphishekatha ,Sirgazhi ,Kumbafishekam ,Kumbaphishekam ,Sirkashi ,
× RELATED மண்ணச்சநல்லூரில் ரூ.38 லட்சம் செலவில்...