×

அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில், நகர அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. முன்னாள் ஆளுநர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பன்னாட்டு இயக்குனர் தனபால், துணை ஆளுநர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் ராஜா, திருநாகரவு, சுப்பிரமணி, ஜெயவேல், செந்தில், சரவணன், பழனி, சிவராஜ், கணேசன், ராமன், செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போச்சம்பள்ளி நகர அரிமா சங்க தலைவராக கௌதம், செயலாளராக பிரபு, சேவை செயலாளராக சுப்பிரமணி, பொருளாளராக பாரதிகுமரன் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

The post அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Arima Sangha ,Bochambally ,Nagar ,Selvaraj ,Arima ,Sangh ,Dinakaran ,
× RELATED மின்சாரம் தாக்கி மாடு பலி