×

போஸ்ட் மெட்ரிக் மற்றும் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 

விருதுநகர், ஜூன் 26: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, 2022-23க்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் மாநில அரசு சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்கும் வகையில் கல்லூரிகளுக்கான https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளம் 30.1.2023ல் திறக்கப்பட்டு 31.5.2023 வரை கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கான https://tnadtwscholar ship.tn.gov.in என்ற இணையதளம் கடந்த ஜூன்.16ல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

The post போஸ்ட் மெட்ரிக் மற்றும் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Collector ,Jayaseelan ,Adi Dravidian ,Tribal ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்