×

குரங்கை விரட்ட ரூ.4000 கரடியாக மாறிய விவசாயி

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்கிம்பூரில் கஜேந்தர் சிங் என்ற விவசாயி கரும்பு பயிரிட்டுள்ளார். இங்கு 40 முதல் 50 குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து கரும்பு பயிரை நாசம் செய்து வருகிறது. குரங்கு நடமாட்டத்தை தடுக்க கஜேந்திர சிங் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால், குரங்கு நடமாட்டத்தை தடுக்க கரடியாக மாற முடிவு செய்தார். இதற்காக கரடி போன்ற ஒரு உடையை ரூ.4,000 கொடுத்து வாங்கினார். பின்னர், அந்த உடையை அணிந்து கரும்பு பயிரியிட்ட நிலத்திலேயே அமர்ந்து கொண்டு, குரங்குகள் வராமல் தடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post குரங்கை விரட்ட ரூ.4000 கரடியாக மாறிய விவசாயி appeared first on Dinakaran.

Tags : Gajender Singh ,Lakhimpur, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...