×

103 வயது பாட்டி பிறந்தநாள்; 3 மாநில சொந்தங்கள் வாழ்த்து ஆயிரம் ஜன்னல் வீடு… இது அன்பு வாழும் கூடு…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முத்துராயன் பகுதியில் வசிப்பவர் வெங்கடலட்சுமம்மா. நேற்று இவருக்கு 103வது பிறந்த நாள். 6 மகள்கள் உள்ள நிலையில், குடும்பத்தில் ஐந்து தலைமுறையாக உள்ள 217 பேர், நேற்று ஒரே இடத்தில் கூடி பிறந்தநாள் விழாவை பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் வெங்கடலட்சுமம்மாவுக்கு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாட்டி வழியில் வந்தவர்கள் அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் இருந்தும், உறவினர்கள் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வந்து ஆசிர்வாதம் பெற்றனர்.

பேரப்பிள்ளைகள் கூறுகையில், ‘பாட்டிபோல நாங்களும் வாழ வேண்டும். பாட்டியும் இன்னும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறோம். எங்கள் பாட்டி இதுவரை மருத்துவமனைக்கு ஒரேஒருமுறை தான் சென்றுள்ளார். கண், காது அனைத்து உறுப்புகளும் நன்றாக உள்ளது. அன்றாட வேலைகளை அவரே செய்கிறார். ராகி, சோளம் களி தான் விரும்பி சாப்பிடுவார்’ என்றனர்.

The post 103 வயது பாட்டி பிறந்தநாள்; 3 மாநில சொந்தங்கள் வாழ்த்து ஆயிரம் ஜன்னல் வீடு… இது அன்பு வாழும் கூடு… appeared first on Dinakaran.

Tags : Venkadalakshammamma ,Osur Muthurayan ,Krishnagiri District ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக...