×

வி.பி.சிங் பிறந்தநாள் ராமதாஸ் வாழ்த்து

சென்னை: 100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற இலக்கை எட்ட வி.பி.சிங்கின் பிறந்தநாளில் மீண்டும் உறுதியேற்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சமூகநீதி தளத்தில் என் மனம் கவர்ந்தவர்களில் ஒருவரும், எனது நண்பருமான முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் 93ம் பிறந்தநாள் இன்று. இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை எதிர்ப்பு சுனாமிகளை புறம்தள்ளி செயல்படுத்தியவர்.

இடஒதுக்கீடு என்ற தத்துவத்தை ஒதுக்கி வைத்து விட்டு, இடப்பங்கீடு என்ற தத்துவத்தை பின்பற்ற வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் 100% சாதிவாரி இடப்பங்கீடு என்ற சமூகநீதி இலக்கை அடைவது தான் நமது லட்சியமாக இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி பயணிக்கவும், போராடவும் வி.பி.சிங் பிறந்தநாளில் நாம் அனைவரும் மீண்டும் உறுதியேற்போம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post வி.பி.சிங் பிறந்தநாள் ராமதாஸ் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,VP Singh ,CHENNAI ,Rama Das ,Bamaka ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம்...