×

மின்கட்டண உயர்வுக்கான திருத்தத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: மின் கட்டண உயர்வுக்கான திருத்தத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: 2024 ஏப்ரல் மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கும், 2025 ஏப்ரல் மாதம் முதல் வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. உச்சபட்ச நேரத்திற்கு ஒரு வகையான மின்சார கட்டணம், சாதாரண நேரத்திற்கு ஒரு வகையான மின்சார கட்டணம் என்பது ஏற்புடையது அல்ல.

இதனால், சாதாரண, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும், பல்வேறு விதமான பணிகளுக்குச்செல்வோர், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் பொதுவாக காலையில் சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம். எனவே, காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பயன்பாடு என்பதும் அதிகமாக இருக்கும். சாதாரண, ஏழை, எளிய பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் நேரத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்திவிட்டு, அவர்கள் பயன்படுத்தாத நேரத்தில் மின்சார கட்டணத்தை குறைக்கிறோம் என்பது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

எனவே, ஒன்றிய அரசு உச்சபட்ட நேரத்தில் அறிவித்துள்ள 20 சதவீத கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், மின்சார விதிகளில் செய்யப்பட்டுள்ள 8ஏ திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

The post மின்கட்டண உயர்வுக்கான திருத்தத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union ,Marxists ,CHENNAI ,Marxist Party ,Union Government ,Marxist ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...