×

ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை பிரதமருக்கு தமிழிசை நன்றி

சென்னை: தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை: அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படும் என்று அறிவித்த பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி. உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதில் அதுவும் இந்தியாவின் மொழி என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும் என்று நம் தமிழ் மொழிக்கு புகழாரம் சூட்டியதற்கும் மேலும் நம் தமிழ்நாட்டின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் விதமாக தன் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்வுகளில் திருக்குறளின் பெருமையையும் மற்றும் தமிழ் இலக்கிய படைப்புகளின் பெருமையை எடுத்து சொல்வதற்கும், காசி தமிழ்ச்சங்கமம், சவுராஷ்ட்ரா தமிழ்ச்சங்கமம் போன்ற நிகழ்வுகளைப் போல தற்போது அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படும் என்று அறிவித்தது தாங்கள் தமிழ்மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் உள்ள பற்றை எடுத்துக்காட்டுகிறது. அதற்கு எனது மனமார்ந்த நன்றி.

The post ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை பிரதமருக்கு தமிழிசை நன்றி appeared first on Dinakaran.

Tags : Tamilisai ,University ,of Houston ,Chennai ,Telangana ,Puducherry ,Governor ,Tamilisai Soundararajan ,America ,University of Houston ,
× RELATED மயிலாப்பூர் வாக்குச்சாவடி எண்-13ல்...