×

லெப்ட் இருந்தா மட்டும்தான் எல்லாமே ரைட்டா நடக்கும்: இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி டிப்ஸ்

மும்பை: ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைக்கான அட்டவணை நாளை வெளியாகவுள்ளது. இந்த நிலையில் உலகக்கோப்பைத் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘‘உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அணியின் டாப் ஆர்டரில் நிச்சயம் இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் டாப் 6 பேட்டிங் வரிசையில் 2 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கும் பட்சத்தில் அணிக்கு சரியான பேலன்ஸை கொண்டு வர முடியும். ரிஷப் பண்ட் காயம் காரணமாக விளையாட முடியாத சூழல் உள்ளது. ஆனால் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. ஏற்கனவே விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், ஜெய்ஸ்வால், திலக் வர்மா உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் எந்த சீனியர் வீரரின் இடத்தையும் எளிதாக நிரப்பும் திறமை கொண்டவர்கள். அதேபோல் நேஹல் வதேரா, சாய் சுதர்சன் உள்ளிட்டோரும் இருக்கிறார்கள். இன்னும் நிறைய இளம் வீரர்கள் திறமையுடன் காத்திருக்கிறார்கள். இவர்களை உலகக்கோப்பைக்குள் தயார் செய்வதே இந்திய அணியின் குறிக்கோளாக இருக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தியுள்ளார். இடதுகை பேட்ஸ்மேன்கள் டாப் ஆர்டரில் இல்லாமல் இந்திய அணி ஏராளமான ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post லெப்ட் இருந்தா மட்டும்தான் எல்லாமே ரைட்டா நடக்கும்: இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags : Ravi Shastri ,Mumbai ,ICC 50 Over ,World Cup ,Dinakaran ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...