×

மீன்பிடி தடைகாலம் முடிந்து 2வது ஞாயிற்றுக்கிழமை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அலைமோதிய அசைவபிரியர்கள்: இறால் 1200 ரூபாய்க்கு விற்பனை

தண்டையார்பேட்டை: மீன்பிடி தடைகாலம் முடிந்து இன்று 2வது ஞாயிற்றுக்கிழமை என்பதால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அசைவபிரியர்கள் அலைமோதினர். தங்களுக்கு பிடித்த மீன்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தடைகாலம் முடிந்து 2வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடித்துகொண்டு கரைக்கு வந்தனர். காசிமேடு மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மீன்கள் பிரஷாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள், அசைவபிரியர்கள் குவிந்தனர்.

கடந்த வாரம் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் கிடைக்காததால் அசைபிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று அதிகளவு மீன்கள் வரத்து இருந்ததாலும் வழக்கமான விலையில் மீன்கள் விற்கப்பட்டதாலும் வியாபாரிகள், அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கி சென்றனர். காசிமேடு மீன் மார்க்கெட்டில் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள், பொதுமக்கள் திரண்டதால் மார்க்கெட் திருவிழாபோல் காட்சியளித்தது.

இன்று விற்கப்பட்ட மீன்களின் விலைகள்: ஒரு கிலோ வஞ்சிரம் ஆயிரம் ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பாறை 400 முதல் 500 வரையும், இறால் 400 முதல் 1200 ரூபாய் வரையும், சங்கரா 300 முதல் 600 ரூபாய் வரையும், வவ்வால் 400 முதல் 600 ரூபாய் வரையும், நண்டு 400 முதல் 650 ரூபாய் வரையும், நெத்திலி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வரும் வாரங்களில் பெரிய பெரிய வகை மீன்கள் கிடைக்கக்கூடும் என மீனவர்கள் தெரிவித்தனர். போதிய அளவில் மீன்கள் விற்பனையானதால் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வாரம் மீன் விற்பனை விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. எப்போதும்போல் மீன் விற்பனை செய்யப்பட்டது.

The post மீன்பிடி தடைகாலம் முடிந்து 2வது ஞாயிற்றுக்கிழமை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அலைமோதிய அசைவபிரியர்கள்: இறால் 1200 ரூபாய்க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kasimedu Fishing Port ,PANTADARPATT ,Kasimedu Fishing Harbour ,Movaivapirians ,Casimedu Fishing Port ,
× RELATED புரட்டாசி மாத சனிக்கிழமைகள்...