×

பால் வியாபாரி தவறி விழுந்து பலி

போடி, ஜூன் 25: போடி அருகே உள்ள சிலமலை மேற்குத்தெருவை சேர்ந்தவர் முத்தையா (55) பால் வியாபாரி. இவர், கடந்த 18ம் தேதி வீட்டின் மாடி படியிலிருந்து கீழே இறங்கி வரும்போது தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு, போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தையா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post பால் வியாபாரி தவறி விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Bodi ,Muthiah ,Silamalai West Street ,Dinakaran ,
× RELATED தாய்ப்பாலை சட்டவிரோதமாக...