×

ஸ்டெர்லைட் ஆலையில் 750 டன் ஜிப்சம் அகற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஜிப்சத்தை அகற்ற உச்சநீதி மன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து ஆலையில் இருந்து ஜிப்சத்தை அகற்றும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் சுமார் 210 டன் ஜிப்சம் அகற்றப்பட்டது. நேற்று 2வது நாளாக சுமார் 550 டன் ஜிப்சம் அகற்றப்பட்டு விருதுநகர் மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுவரை 750 டன் ஜிப்சம் அகற்றப்பட்டு உள்ளது. லாரிகள் மூலம் ஜிப்சம் அகற்றும் பணி, அதிகாரிகள் குழு மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

The post ஸ்டெர்லைட் ஆலையில் 750 டன் ஜிப்சம் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Sterlite ,Thoothukudi ,Supreme Court ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட...