×

நீங்கள் தாய்நாட்டின் பாதுகாவலர்களா? அல்லது எதிரிகளா?: வாக்னர் குழுவிடம் தைரியமாகக் கேள்வியெழுப்பும் ரஷ்ய மக்கள்

மாஸ்கோ: ரஷ்யாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் ஆயுத குழுவினரிடம் பொதுமக்கள் கேள்வி கேட்கும் காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் குழு அந்நாட்டின் ரோஸ்டோ உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைப்பற்றப்பட்ட நகரங்களில் முக்கிய சந்திப்புகளில் ஆயுத ஏந்திய வாக்னர் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். டாங்கிகள் உள்ளிட்ட போர் ஆயுதங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆயுதம் ஏந்திய வாக்னர் குழுவினரிடம் கிளர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய மக்கள் தைரியமாக கேள்வி எழுப்பும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்ய மக்கள் கிளர்ச்சியாளர்களிடம் நீங்கள் தாய்நாட்டின் பாதுகாவலர்களா? அல்லது எதிரிகளா? எனவும், பாதுகாவலர்கள் என்றால் ஏன் இப்படியான கிளர்ச்சியை நடத்தி மக்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றன. இதற்கிடையே ரஷ்ய சீரழிகிறது என்ற அர்த்தத்தில் #RussiaIsCollapsing என சமூக ஊடகங்களில் ரஷ்ய மக்களால் ட்ரெண்ட் செய்யப்படுகிறது.

The post நீங்கள் தாய்நாட்டின் பாதுகாவலர்களா? அல்லது எதிரிகளா?: வாக்னர் குழுவிடம் தைரியமாகக் கேள்வியெழுப்பும் ரஷ்ய மக்கள் appeared first on Dinakaran.

Tags : Wagner ,Moscow ,Russia ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு