×

பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் கோவையில் மீண்டும் கைது..!!

சென்னை: பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் கோவையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். விஜய் குறித்து அவதூறாக பதிவிட்டதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்னையில் புகார் அளித்திருந்தனர். பெரியார், கலைஞர் குறித்து உமா கார்த்திகேயன் அவதூறு பரப்பியதாக ஏற்கனவே திமுகவினர் புகார் அளித்திருந்தனர். திமுகவினர் அளித்திருந்த புகார் அடிப்படையில் உமா கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உமா கார்த்திகேயனை கோவை சிறையிலிருந்து காவல் துறையினர் சென்னை அழைத்து செல்கின்றனர்.

The post பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் கோவையில் மீண்டும் கைது..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Uma Karthigayan ,Chennai ,Vijay ,
× RELATED தேர்தல் முடிவுக்குப் பிறகு மேலே...