×

ரஷ்யாவில் திடீர் கலகத்தில் குதித்த புதின் ஆதரவு ஆயுத படை: தங்கள் படையினரை ரஷ்ய ராணுவம் கொன்றுவிட்டதாக வாக்னர் குழு புகார்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆதரவான வாக்னர் குழு என்ற ஆயுத படை அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராகவே திடீர் கலகத்தில் ஈடுப்பட்டுள்ளதால் தலைநகர் மாஸ்கோவில் பதற்றம் நிலவியது. வாக்னர் ஆயுத குழு என்பது உக்ரைனில் ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து போரிட்டு வரும் தனியார் ஆயுத படை பிரிவாகும். உக்ரைனுக்கு எதிராக செயல்பட்டு வந்த இந்த படைக்கு தேவைப்படும் உதவிகளை ரஷ்ய அரசு செய்து வந்தது. இந்நிலையில் வாக்னர் ஆயுத குழு திடீரென ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவே கலக்கத்தில் குதித்திருக்கிறது.

வாக்னர் குழுவை சேர்ந்த 2000 பேரை ரஷ்ய ராணுவம் ஏவுகணை வீசி கொண்டு விட்டதாக குற்றம் சாட்டும் அக்குழுவினர் அதற்கு பலி வாங்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக கூறுகிறார்கள். முதற்கட்டமாக ரஷ்ய மக்களுக்காக உயிர் தியாகம் செய்ய உள்ள வாக்னர் படையினர் ரஷ்யாவுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ள வாக்னர் ஆயுத குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் மேலும் 25,000 வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். வாக்னர் குழு ஆயுத படையினர் உக்ரைனில் இருந்து விலகி ரஷ்யாவின் ரோஸ்டோ நகரத்துக்குள் நுழைந்து உள்துறை தலைமையகத்தை கைப்பற்றியுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தலைநகர் மாஸ்கோ முழுவதும் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள், பிற முக்கிய இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வாக்னர் குழுவின் நிலைமை குறித்து அதிபர் புதின் அறிந்து இருப்பதாகவும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கிரெம்லின் மாளிகை அறிவித்துள்ளது. வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ரஷ்ய அரசு அவரை கைது செய்ய ஆணையிட்டு இருக்கிறது.

The post ரஷ்யாவில் திடீர் கலகத்தில் குதித்த புதின் ஆதரவு ஆயுத படை: தங்கள் படையினரை ரஷ்ய ராணுவம் கொன்றுவிட்டதாக வாக்னர் குழு புகார் appeared first on Dinakaran.

Tags : Putin ,Russia ,Wagner group ,Moscow ,President ,Dinakaran ,
× RELATED 5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின்...