×

வானதி சீனிவாசன் எம்எல்ஏ கல்லணையை பார்வை

திருவெறும்பூர்: பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ நேற்று தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையை பார்வையிட்டார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நேற்று மாலை கல்லணையை பார்வையிட்டார். பின்னர் கல்லணை விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது அவரை கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். பின்னர் அங்கிருந்து வானதி சீனிவாசன் தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார்.

The post வானதி சீனிவாசன் எம்எல்ஏ கல்லணையை பார்வை appeared first on Dinakaran.

Tags : Vanathi Srinivasan ,MLA ,Kallana ,Thiruverumpur ,BJP National Women's Team ,President ,Thanjavur District Kallani ,Thanjavur… ,MLA Kallanai ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...