×

சின்னாளபட்டி அருகே எல்லம்மாள், கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் திரளாக தரிசனம்

 

நிலக்கோட்டை, ஜூன் 24: சின்னாளபட்டி காமாட்சிநகரில் எல்லம்மாள், கருப்பணசாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சின்னாளபட்டியில் காமாட்சிநகரில் உள்ள எல்லம்மாள், சப்தகன்னிமார், 18ம்படி கருப்பணசாமி கோயில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய கும்பாபிஷேக விழா,

மஹா தீபாராதனை, மூன்று கால யாக வேள்வி பூஜை உள்ளிட்டவை சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை யாத்திராதானம், கலசம் புறப்பாடு நிகழ்ச்சி முடிந்தவுடன்
காலை 10.20 மணியளவில் சிவாச்சாரியர்களால் ராஜ கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கும்பாபிஷேக குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இக்கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகளை தாடிக்கொம்பு வேதநாராயணன் (எ) பாலாஜி அமுதன் தலைமையிலான பட்டர்கள் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் தருமத்துப்பட்டி பங்காளி வகையறாக்கள் செய்திருந்தனர்.

The post சின்னாளபட்டி அருகே எல்லம்மாள், கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் திரளாக தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Ellammal ,Karuppanaswamy temple ,Chinnalapatti ,Nilakottai ,Kumbabhishekam ,Chinnalapatti Kamachinagar ,
× RELATED சின்னாளபட்டி அருகே தீயில் கருகி 40...