×

அழகர்மலையில் அழுகிய நிலையில் ஆண் பிணம்: நத்தம் போலீசார் விசாரணை

 

நத்தம், ஜூன் 24: நத்தம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட அழகர்மலை பகுதியில் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இங்குள்ள ஒரு மரத்தில் ஆண் பிணம் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் நத்தம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு அழுகிய நிலையில் இருந்த பிணத்தை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும் என தெரிகிறது. அவர் காக்கி சட்டை அணிந்துள்ளார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அடித்துக்கொல்லப்பட்ட தூக்கில் தொங்கவிடப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அழகர்மலையில் அழுகிய நிலையில் ஆண் பிணம்: நத்தம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Alagarmalai ,Natham police ,Natham ,Natham Police Sargam ,Dinakaran ,
× RELATED நத்தத்தில் மளிகை கடை கதவை உடைத்து ரூ.1.75 லட்சம் திருட்டு