×

லாட்டரி விற்ற இருவர் கைது

 

ஈரோடு,ஜூன்24: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரிகள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு டவுன் மற்றும் வடக்கு போலீசார் நேற்றுமுன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மரப்பாலம் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்ற அதேபகுதியைச் சேர்ந்த ஷாகுல் அமீது (40) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்த 10 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.இதேபோல, ஈரோடு வடக்கு போலீசார், கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள பேக்கரி அருகில், வெள்ளைத் தாளில் எண்களை எழுதி போலி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த அசோகபுரம், நேரு வீதியைச் சேர்ந்த விஜயகுமார் (32) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

The post லாட்டரி விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது