×

தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் ரூ.2.39 கோடி மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை:சென்னை மாநகராட்சி, 4வது மண்டலம், 38வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதியில் மழைநீர் கால்வாய் அமைத்துத்தர வேண்டும் என பொதுமக்கள் மாமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், மாநகராட்சி நிதியிலிருந்து ரூ.2.39 கோடி ஒதுக்கப்பட்டு, நேதாஜி நகர், ராஜிவ்காந்தி நகர், வினோபா நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி துவக்க விழா, மண்டல குழு தலைவர் கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ எபினேசர் கலந்துகொண்டு புதிய மழைநீர் கால்வாய் பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது, இந்த பகுதிகளில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், இந்த கால்வாய் அமைப்பதன் மூலம் மழைக்காலங்களில் இந்த பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு இருக்கும், என்றார். நிகழ்ச்சியில், ஆர்கே நகர் பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், வட்ட செயலாளர் சுந்தர், மாநகராட்சி அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் ரூ.2.39 கோடி மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpeti ,Netaji Nagar ,MLA ,Thandaiyarpet ,Chennai Corporation ,4th Zone ,38th Ward ,
× RELATED திருவெறும்பூர் அருகே தனியார்...